காதல் நீதானே காவலனே..! : Kaathal Neethaane Kaavalane..! (Tamil Edition)


Worth: ₹ 400.00
(as of Jul 29,2021 12:59:03 UTC – Particulars)


“அந்த பொண்ணு எங்க..?” என்றான்.

“இதோ இங்க இருக்கு சார்..!” என்றார் ஒரு பெண்மணி.

அவர்காட்டிய திசையில் பார்த்த வருண், மனதிற்குள் திகைக்க செய்தான்.

முழு நிலவாய் இருந்தாள் அவள்.வெள்ளை நிற சுடிதார் அவளை நிலவாகவே காட்டியது.அலங்காரம் ஏதும் இல்லை. ஆனால் சோகமாய் இருப்பதைப் போல் இருந்தது.ஒரு பெரிய ஹேண்ட் பேக் மட்டுமே வைத்திருந்தாள்.

“எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே..!” என்று யோசித்தவன்,

அதற்குள் அவள் அருகில் நெருங்கியவன்,

“எங்க இருந்து வரீங்க..?” என்றான்.

“திண்டுக்கல்..!” என்றாள்.

“இங்க எதுக்காக இறங்குனிங்க..?” என்றான்.

“சார்..! பஸ்ஸ இங்க மோட்டல்ல நிறுத்துனாங்க.நான் பாத்ரூம் போயிட்டு வரதுக்குள்ள பஸ் போய்டுச்சு.அப்போ இவங்க ரெண்டும் பேரும் என் பக்கத்தில் வந்து, ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சாங்க..!” என்று சொல்வதற்குள் அவள் கண்கள் கலங்கிவிட்டது.

“ஒரு பொண்ணு தனியா நின்றிருந்தா போதும்…உடனே வந்துடுவிங்களே.நாய் மாதிரி நாக்கத் தொங்கப் போட்டுகிட்டே அலைய வேண்டியது..!” என்று இருவருக்கும் ஆளுக்கொரு அறை விட்டான் வருண்.அவனின் ஒரு அடியில் இருவரும் சுருண்டு விழுக, அதைப் பார்த்த அனைவருக்கும் பக்கென்று இருந்தது.

அவளுக்கோ பயத்தில் நாக்கு உலர்ந்து போய்விட்டது.கால்கள் தன் போக்கில் இரண்டு எட்டு பின்னால் செல்ல, அவளைப் பார்த்து முறைத்து வைத்தான் வருண்.

அவன் திரும்பி அவர்களைப் பார்ப்பதற்குள் அவர்கள் விழுந்த அடையாளமே இல்லாமல் ஓடியிருந்தனர்.

“ஷிட்..” என்று கால்களால் தரையை ஓங்கி மிதித்தவன், மீண்டும் அவளைப் பார்த்தான்.

“எங்க போறீங்க..?” என்றான்.

“சென்னை..” என்றாள்.

ஒரு நிமிடம் யோசித்தவன்,

“நானும் சென்னை தான் போறேன். வாங்க டிராப் பண்றேன்..!” என்றான்.

அவன் சொன்ன விதத்தில், அருகில் இருந்தவர்கள் தனக்குள் பேசிக் கொள்ள, அவளோ மருண்ட பார்வை பார்த்தாள்.

அவளின் பார்வையிலும், அங்கிருந்தவர்களின் பேச்சிலும் எரிச்சல் அடைந்தவன்,

“என்னைப் பார்த்தா எப்படி இருக்கு. இப்ப ஓடிப் போனானுங்களே.. அந்த பொறுக்கிங்க மாதிரி இருக்கா..?” என்றவன்.

தனது ஐடியை எடுத்து காட்ட, அங்கிருந்தவர்கள் உடனே அவனை மரியாதையாக பார்க்க ஆரம்பித்தனர். அவளோ கண்களை மேலும் உருட்டித் திகைத்தாள்.

“போலீசா..?” என்றவளுக்கு நாக்கு உலர்ந்தது.

“திண்டுக்கல் எஸ்பி..!” என்றான் கொஞ்சம் மிடுக்காய்.

அவள் திகைத்து நிற்க,

“இது வேலைக்கு ஆகாது..!” என்று எண்ணியவன், தன் போக்கில் சென்று காரில் ஏறிக் கொண்டான்.அவன் அருகில் இருந்து நகன்ற உடன் அவளுக்கு சுயம் உரைக்க,சுற்றும் முற்றும் பார்த்தாள்.அங்கு இருப்பதை விட, அவனுடன் செல்வதே மேல் எனத் தோன்றியது அவளுக்கு.

வேகமாய் சென்றவள் அவன் காரின் அருகில் தயங்கி நிற்க, அவள் வருவதைப் பார்த்தவன்,முன் பக்க கதவினைத் திறந்து விட்டான்.

“தேங்க்ஸ் சார்..!” என்றபடி உள்ளே ஏறி அமர்ந்தாள் அவள்.

கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தாள் அவள்.இதுவரை யாருடனும் இப்படித் தனியாக பயணம் செய்ததில்லை.வருணோ அவளை சட்டை செய்யாமல் கார் ஓட்டுவது மட்டுமே வேலை என்பதை போல் இருந்தான்.அவளும் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தாள்.

“பேரென்ன..?” என்றான் திடீரென்று.

“ங்கான்..!” என்று விழித்தாள்.

“காது கேட்குது தான..? உன் பேரென்ன..?” என்றான் மீண்டும் அழுத்தமாய்.

“சக்தி பிரியதர்ஷினி ” என்றாள்.

“பேருல இருக்குற சக்தி…மனசுல இல்ல போல..?” என்றான்.

“அப்படி எல்லாம் இல்லை..” என்றாள் வெடுக்கென்று.

“பொண்ணுங்க எந்த விஷயத்துக்கும் கலங்கி நிக்க கூடாது.எந்த நிலைமையிலும் தைரியத்தை கைவிடவே கூடாது. எப்பவும் நாலு பேரு உதவிக்கு வருவாங்கன்னு நினைச்சுட்டே இருக்கக் கூடாது..!” என்றான்.

“அதான் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தேனே..!” என்றான்.

“அதுக்காக தைரியமே இல்லைன்னு அர்த்தமில்லை. எதிர்பாராத ஒரு நிகழ்வு கொடுத்த பதட்டம் அவ்வளவு தான்.எனக்கு போலீசுன்னா தான் பயம். ரௌடிகளைப் பார்த்து எல்லாம் பயமில்லை..!” என்றாள்.

‘போலீசை விட ரௌடிங்க பெஸ்ட்…அப்படித்தான..? என்ன ஒரு உயர்ந்த எண்ணம்..?” என்றவன் அதற்கு மேல அவளிடம் பேச்சைத் தொடரவில்லை.

“தேவையில்லாம வாயைக் குடுத்துட்டோமோ..?” என்று எண்ணியவள், அவனை ஓரக்கண்ணால் பார்க்க, அவனோ சாலையில் மட்டுமே பார்வையைப் பதித்திருந்தான்.

“ஆளு செம்மையா தான் இருக்கான். ஆனா பயங்கர டெரரா இருப்பான் போலவே..!” என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டு வந்தாள் சக்தி.

See also  The Mill on the Floss Illustrated
iamin.in participates in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for sites to earn advertising fees by advertising and linking to Amazon.in. Amazon and the Amazon logo are trademarks of Amazon.in, Inc. or its affiliates.iamin.in is a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for sites to earn fees by advertising and linking to Amazon.in. Some links on this site will lead to a commission or payment for the site owner.